அஜித் - வெற்றிமாறனுடன் கைகோர்க்கும் முன்னணி நட்சத்திரம்.. கலக்கல் அப்டேட்
அஜித் - வெற்றிமாறன்
அஜித் முதல் முறையாக வெற்றிமாறனுடன் இணைய போகிறார் என தொடர்ந்து தகவல்கள் வெளியாகிறது.
விடாமுயற்சி திரைப்படத்தில் தற்போது நடித்து வரும் அஜித் அடுத்ததாக ஏகே 63 திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கவுள்ளார்.
இதுகுறித்து விரைவில் அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகவுள்ளது. ஏகே 63 படத்தை தொடர்ந்து ஏகே 64 படத்தை தான் வெற்றிமாறன் இயக்க போகிறார் என திரை வட்டாரத்தில் பேசப்படுகிறது.
இப்படத்தை தயாரிப்பாளர் எல்ரெட் குமார் தயாரிக்க போகிறாராம். இவர் தயாரிப்பில் தான் தற்போது விடுதலை 1 மற்றும் 2 படங்கள் உருவாகியுள்ளன.
கலக்கல் அப்டேட்
இந்நிலையில், அஜித் - வெற்றிமாறன் கூட்டணியில் பிரபல முன்னணி நட்சத்திரம் ஒருவரும் இணைந்துள்ளார்.அவர் வேறு யாருமில்லை சந்தோஷ் நாராயணன் தான்.
ஆம், அஜித் - வெற்றிமாறன் இணையும் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் தான் இசையமைக்க உள்ளார் என அப்டேட் வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்களுக்கு கொண்டாட்டத்தில் உள்ளனர்.

விராட் கோலியுடன் தொடர்பு.., ஒரு காலத்தில் பலூன்களை விற்று, ரூ.61,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கியவர் யார்? News Lankasri

மத்திய ஆசிய இஸ்லாமிய நாடுடன் கைகோர்க்கும் இந்தியா - சீனாவின் BRI திட்டத்திற்கு நேரடி போட்டியாக TITR News Lankasri
