ப்ரீ புக்கிங்கில் Record Breaking வசூல் செய்துள்ள அஜித்தின் விடாமுயற்சி... மாஸ் தகவல்
விடாமுயற்சி
அஜித் நடிப்பில் கடைசியாக கடந்த 2023ம் வருடம் பொங்கல் ஸ்பெஷலாக வெளியானது துணிவு திரைப்படம்.
அந்த படத்திற்கு பிறகு அஜித் விடாமுயற்சி படம் கமிட்டாகி நடித்து வந்தார், கடந்த வருடமே படம் ரிலீஸ் ஆகும் என ரசிகர்கள் எதிர்ப்பார்க்க கடைசியில் நடக்கவில்லை. 2025, பிப்ரவரி 6ம் தேதி அஜித் நடித்துள்ள விடாமுயற்சி திரைப்படம் வெளியாக உள்ளது.
மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித், த்ரிஷா, அர்ஜுன், ரெஜினா, ஆரவ் மற்றும் பலர் நடிக்க அனிருத் இசையமைத்துள்ளார்.
ப்ரீ புக்கிங்
படம் தமிழகத்தில் மட்டுமே 900 திரைகளுக்கு மேலாகவும், மொத்தமாக 3650 திரைகளுக்கு மேல் ஒளிபரப்பாக இருப்பதாக தகவல்கள் வந்தது.
தமிழகத்தில் ரிலீஸ் 2 நாள் முன்பு புக்கிங் தொடங்கும். ஆனால் வெளிநாடுகளில் எப்போதோ ப்ரீ புக்கிங் தொடங்கிவிட்டது. அதன்படி மலேசியாவில் ப்ரீ புக்கிங்கில் இதுவரை எந்த படமும் செய்யாத கலெக்ஷன் செய்துள்ளதாம்.
ரெக்கார்ட் பிரேகிங் ப்ரீ புக்கிங் சாதனை செய்துவரும் அஜித்தின் விடாமுயற்சி மலேசியாவில் இந்திய மதிப்பில் ரூ. 1 கோடி வரை கலெக்ஷன் செய்துள்ளதாம்.