விடாமுயற்சி படத்தின் சென்சார் சான்றிதழ்.. பல கெட்ட வார்த்தைகள்! கத்திரி போட்ட குழு
விடாமுயற்சி
இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடித்து உருவாகியிருக்கும் திரைப்படம் விடாமுயற்சி. இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது.
இப்படத்தில் பல ஆண்டுகள் கழித்து அஜித்துடன் த்ரிஷா இணைந்து நடித்துள்ளார். மேலும் அர்ஜுன், ரெஜினா, ஆரவ் உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்துள்ளனர். சமீபத்தில் இப்படத்தின் டீசர் மற்றும் முதல் பாடல் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
வருகிற பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீரென ரிலீஸ் தள்ளிபோய்விட்டது. இது அஜித் ரசிகர்களுக்கு வருத்தத்தை கொடுத்தது.
ஜனவரி 23 அல்லது 30ஆம் தேதி விடாமுயற்சி வெளிவருவதற்கான சாத்தியம் உள்ளதாக பேசப்படுகிறது. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பிற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்துகொண்டு இருக்கிறார்கள்.
சென்சார் சான்றிதழ்
இந்த நிலையில், விடாமுயற்சி படத்தின் சென்சார் சான்றிதழ் வெளியாகியுள்ளது. இதில் படத்தின் ரன் டைம் 2 மணி நேரம் 31 நிமிடங்கள் 46 வினாடிகள் என குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் படத்திலிருந்து பல கெட்ட வார்த்தைகளை கத்திரி போட்டு தூக்கியுள்ளது சென்சார் குழு. அதுவும் இதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதோ அந்த சென்சார் சான்றிதழ்..


கூட்டம் கூடுவதெல்லாம் விஷயமல்ல; 11வது முறையும் தோல்விதான் - அதிமுகவை சீண்டிய செந்தில் பாலாஜி! IBC Tamilnadu

32 படங்களில் நடித்தவர்.., 15 வயதில் சினிமாவை விட்டு வெளியேறி ஐஏஎஸ் அதிகாரியான நடிகை யார்? News Lankasri
