அடுத்த மாதம் ரிலீஸ் ஆகி மாஸ் காட்டப்போகும் விடாமுயற்சி பட ப்ரீ புக்கிங்.. முழு விவரம்
விடாமுயற்சி
விடாமுயற்சி, நடிகர் அஜித் பல ரிஸ்க் எடுத்து நடித்துள்ள ரசிகர்கள் மிகவும் எதிர்ப்பார்க்கும் ஒரு திரைப்படம்.
இப்பட படப்பிடிப்பின் போது ஒரு விபத்து ஏற்பட அந்த வீடியோ வெளியாகி ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்தது, அந்த அளவிற்கு படத்திற்காக நிறைய கஷ்டப்பட்டு நடித்துள்ளார்.
விடாமுயற்சி ரிலீஸ் என்றாலே திருவிழா தான் என அவரே இயக்குனர் மகிழ்திருமேனியிடம் கூறியிருக்கிறார்.
வரும் பிப்ரவரி 6ம் தேதி படம் ரிலீஸ் ஆக உள்ளது.
ப்ரீ புக்கிங்
துணிவு படத்திற்கு பிறகு அஜித்தை திரையில் காண இருப்பதால் ரசிகர்கள் ஆவலாக காத்துக் கொண்டிருக்கின்றனர். இப்படத்தை தமிழகத்தில் உள்ள 90 சதவீத தியேட்டர்களில் வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ரெட் ஜெயன்ட் மூவிஸ் வெளியிடும் இப்படம் சுமார் 800 தியேட்டர்கள் வரை வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் இப்படி படம் குறித்து நிறைய விஷயங்கள் வெளியாக வெளிநாடுகளில் படத்தின் ப்ரீ புக்கிங் மாஸாக நடக்கிறது. ஓவர்சீஸில் இதுவரை ப்ரீ புக்கிங்கில் மட்டும் படம் ரூ. 30 லட்சத்திற்கு மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

நான் இப்போ 7 மாத கர்ப்பம்; ஆனால், எனக்கு 27 வயதில் பொண்ணு இருக்கா - சீரியல் நடிகை அகிலா IBC Tamilnadu

கடும் நிதி நெருக்கடிக்கு நடுவில்.., யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்ற காய்கறி வியாபாரியின் மகள் News Lankasri
