முதல் நாளில் மட்டுமே தெறிக்கும் வசூல் வேட்டை நடத்திய விடாமுயற்சி... தமிழக வசூல் விவரம்
விடாமுயற்சி
மகிழ்திருமேனி அஜித்துடன் முதன்முறையாக கூட்டணி அமைத்து எடுத்த படம் விடாமுயற்சி.
ஆக்ஷன், த்ரில்லர் படமாக உருவாகியிருக்கும் இப்படத்திற்கு மக்கள் மத்தியில் பெரிய எதிர்ப்பார்ப்பு இருந்தது. துணிவு படத்திற்கு பிறகு சுமார் 2 ஆண்டுகள் கழித்து விடாமுயற்சி வெளியாகி இருக்கிறது.
இப்படம் 1997ல் வெளியான ஹாலிவுட் படமான விரேக்டவுன் படத்தின் தழுவலாக உருவாக்கப்பட்டுள்ளது. மலேசியா, நார்த் அமெரிக்கா என வெளிநாடுகளில் பல படங்களில் ப்ரீ புக்கிங்கில் விடாமுயற்சி மாஸ் காட்டியுள்ள தகவல்கள் நிறைய வந்தன.
தமிழகம்
ரசிகர்கள் மிகவும் எதிர்ப்பார்த்த பிப்ரவரி 6ம் தேதியும் வந்துவிட்டது, விடாமுயற்சி படமும் வெளியாகிவிட்டது. இனி பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனில் படம் என்னவெல்லாம் சாதனை செய்யப்போகிறது என்பதை பொறுத்திருந்து காண்போம்.
சென்னையில் முதல் நாளில் ரூ. 2.3 கோடி வசூலித்த இப்படம் உலகம் முழுவதும் ரூ. 55 கோடிக்கு மேல் வசூலித்திருந்தது. தமிழகத்தில் மட்டும் ரூ. 30 கோடிக்கு மேல் வசூல் வேட்டை நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது.