அஜித்தின் விடா முயற்சி படத்தின் நாயகி இவர்தானா?- செம ஜோடியாச்சே
நடிகர் அஜித்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக, பலரும் கவனிக்கும் ஒரு முக்கிய நடிகராக இருக்கிறார் அஜித்.
கடைசியாக இவரது நடிப்பில் துணிவு திரைப்படம் வெளியாகி இருந்தது, படம் வங்கியில் நடக்கும் விஷயங்களை மக்களுக்கு எடுத்துக் காட்டி விழப்புணர்வு ஏற்படுத்தும் படமாக அமைந்துள்ளது.
அடுத்து அஜித் லைகா நிறுவன தயாரிப்பில் படம் நடிக்கிறார் என்பது உடனே முடிவானது, ஆனால் இயக்குனர் மட்டும் யாரென்று தெரியாமல் இருந்தது.
இந்த நிலையில் தான் அஜித்தின் பிறந்தநாள் மே 1ம் தேதி லைகா நிறுவனம் அஜித்தின் புதிய பட இயக்குனர் மகிழ் திருமேனி என அறிவித்தனர்.
இம்மாத இறுதியில் படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என கூறப்படுகிறது.

படத்தின் நாயகி
பொன்னியின் செல்வன் படத்தின் மூலம் மக்களை கவர்ந்துள்ள திரிஷா இப்போது விஜய்யுடன் லியோ படத்தில் நடித்து வருகிறார். இப்போது என்ன தகவல் என்றால் அஜித்தின் விடாமுயற்சி படத்தில் நாயகியாக திரிஷா நடிக்க கமிட்டாகி இருப்பதாக கூறப்படுகிறது.
ஆனால் இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை.
அஜித்துடன் திரிஷா இணைந்து நடித்தால் சூப்பராக இருக்கும் என்பது ரசிகர்களின் ஆசை.

மறைந்த நடிகர் மனோபாலாவிற்கு இவ்வளவு சோகம் இருந்ததா?- கைபட அவரே எழுதிய எமோஷ்னல் கடிதம்
இந்தியாவிற்கு புறப்படவிருந்த ஈரானிய சரக்கு விமானம் மீது வான்வழித் தாக்குதல் நடத்திய அமெரிக்கா News Lankasri
ஈரான் ட்ரோன் தாக்குதலில் சிக்கிய மிகப்பெரிய எண்ணெய் கப்பல்: பதிலடியால் மிரள வைத்த ட்ரம்ப் News Lankasri