ஆரம்பத்திலேயே அஜித்தின் விடாமுயற்சிக்கு ஏற்பட்ட சிக்கல்- படப்பிடிப்பிற்கே இப்படியா?
நடிகர் அஜித்
அஜித் துணிவு படத்தை தொடர்ந்து அடுத்து படத்தில் கமிட்டாகி நேரம் எடுத்து வந்தார். அதற்கு இடைப்பட்ட காலத்தில் பைக் டூர் செல்வது, அப்பா உயிரிழப்பு என நிறைய நடந்துவிட்டது.
இப்போது சென்னை திரும்பியுள்ள அஜித் விடாமுயற்சி படப்பிடிப்பில் மே கடைசியில் இணைவார் என கூறப்பட்டது. மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித் நடிக்கும் விடாமுயற்சி என்ற படத்தை லைகா நிறுவனம் தான் தயாரிக்க இருக்கிறது.
என்ன சிக்கல்
விடாமுயற்சி படப்பிடிப்பு மே மாத இறுதியில் தொடங்கும் என கூறப்பட்ட நிலையில் லைகா நிறுவனம் சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
இதனால் லைகா சம்பந்தப்பட்ட அத்தனை பணப்பரிவர்த்தனைகளும் தற்காலிகமாக முடக்கப்பட்டு இருக்கிறது. எனவே அஜித்தின் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதிலேயே பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
விஜய் ஆண்டனியின் பிச்சைக்காரன் 2 படம் முதல் நாளில் செய்த மாஸ் வசூல்- செம கலெக்ஷன்