படப்பிடிப்பு ஒருபக்கம் நடக்க அதிக தொகைக்கு விலைபோன அஜித்தின் விடாமுயற்சி சாட்டிலைட் உரிமம்- முழு விவரம்
விடாமுயற்சி
லைகா நிறுவனம் தயாரிக்க மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித் நடிப்பில் தயாராக இருக்கும் படம் விடாமுயற்சி.
இப்படம் பற்றிய தகவல் வருட ஆரம்பத்திலேயே வெளியாகிவிட்டது, ஆனால் படப்பிடிப்பு தொடங்கப்படாமலேயே இருந்தது.
அந்த நேரத்தில் தான் அஜித் பைக்கில் சுற்றுலா சென்றுகொண்டிருந்தார்.
அண்மையில் விடாமுயற்சி பட படப்பிடிப்பு அஜர்பைஜானில் நடைபெற்று வந்தது. அப்போது ஆக்ஷன் காட்சிகள் படமாக்கப்பட அந்த வீடியோ மற்றும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது.
இப்படத்தில் அஜித்துடன் த்ரிஷா, ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் நடித்து வருவதாக சொல்லப்படுகிறது.
பட வியாபாரம்
விடாமுயற்சி பட படப்பிடிப்பு ஒருபக்கம் நடந்துவர இப்போது படத்தின் வியாபாரம் சூடு பிடிக்க நடந்துள்ளதாக கூறப்படுகிறது.
அதன்படி இந்தப் படத்தின் தொலைக்காட்சி உரிமையை சன் டிவி வாங்கியுள்ளதாகவும், இதற்காக பல கோடிகள் வரை பிசினஸ் நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கின்றனர். ஓடிடியில் நெட்பிளிக்ஸ் நிறுவனம் வாங்க மும்முரம் காட்டி வருவதாக தெரிவிக்கின்றனர்.