இதுவரை தல அஜித் - தளபதி விஜய் நேருக்குநேர் மோதிக்கொண்ட படங்கள்.. அதிக வெற்றி யார் பக்கம்
தல அஜித் மற்றும் தளபதி விஜய் இருவருமே தமிழ் திரையுலகின் மிகப்பெரிய ஆளுமையில் இருப்பவர்கள்.
இவர்களது நடிப்பில் இதுவரை பல தோல்வி படங்களும், பல வெற்றிப்படங்களை வெளியாகியுள்ளது.
அதே போல் தல அஜித் மற்றும் தளபதி விஜய்யின் படங்கள் ஒரே நேரத்திலும் திரையரங்கில் வெளியாகியுள்ளது.
அப்படி ஒரே சமயத்தில் வெளியாகி, மோதிக்கொண்ட தல அஜித் மற்றும் தளபதி விஜய் படங்கள்ல என்னென்ன.
அதில் இதுவரை யார் பக்கம் அதிக வெற்றிகள் வந்துள்ளது என்று இங்கு பார்ப்போம்.
விஜய் | அஜித்
1. 1996 = கோயம்புத்தூர் மாப்பிள்ளை { வெற்றி } - வான்மதி { வெற்றி }
2. 1996 = பூவே உனக்காக { ப்ளாக் பஸ்டர் ஹிட் } - கல்லூரி வாசல் { தோல்வி }
3. 1999 = துள்ளாத மனமும் துள்ளும் { சூப்பர்ஹிட் } - உன்னை தேடி { தோல்வி }
4. 2000 = குஷி { சூப்பர்ஹிட் } - உன்னை கொடு என்ன தருவேன் { தோல்வி }
5. 2001 = பிரண்ட்ஸ் { ஹிட் } - தீனா { ஹிட் }
6. 2002 = பகவதி { படுதோல்வி } - வில்லன் { ப்ளாக் பஸ்டர் ஹிட் }
7. 2003 = திருமலை - { சூப்பர்ஹிட் } - ஆஞ்சநேயா { தோல்வி }
8. 2006 = ஆதி { தோல்வி } - பரமசிவன் { தோல்வி }
9. 2007 = போக்கிரி { ப்ளாக் பஸ்டர் ஹிட் } - ஆழ்வார் { தோல்வி }
10. 2014 = ஜில்லா { தோல்வி } - வீரம் { ஹிட் }
மேலும் விரைவில் 2022ஆம் ஆண்டு பொங்கல் அன்று அஜித்தின் வலிமை வெளியாகவுள்ளது. அதே சமயத்தில் விஜய்யின் பீஸ்ட் திரைப்படமும் வெளியானால், கண்டிப்பாக மிகப்பெரிய போட்டி தமிழ் திரையுலகில் நிலவும்.
அதே போல் இந்த முறை யாருடைய படம் வெற்றி பெரும் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் அதிகளவில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.