ராஜாவின் பார்வையிலே படத்திற்காக அஜித், விஜய் எவ்வளவு சம்பளம் வாங்கினார்கள் தெரியுமா?
தமிழ் சினிமாவில் அஜித், விஜய் இருவரும் இணைந்து அவர்களது ஆரம்ப கட்டத்தில் இணைந்து ஒரு படம் நடித்தார்கள்.
அப்படத்தின் பெயர் ராஜாவின் பார்வையிலே, ஜானகி சௌந்தர் இயக்கத்தில் 1995ம் ஆண்டு இந்த திரைப்படம் வெளியாகி இருந்தது. இப்படத்தின் தயாரிப்பாளர் எஸ்.சௌந்தர பாண்டியன் இப்படம் குறித்து ஒரு பேட்டியில் பேசியிருந்தார்.
அதில் அவர், ராஜாவின் பார்வையிலேயே கதை ரெடியானதும் யாரை போடலாம் என யோசித்தோம்.
விஜய்-அஜித் தேர்வு செய்து அவர்களிடமும் கதை கூறினோம், அவர்கள் எந்த நிபந்தனையும் இல்லாமல் நடிக்க ஒப்புக் கொண்டார்கள்.
படத்தோட மொத்த செலவே ரொம்ப கம்மி தான். அதில் அவங்களுக்கு என்ன பெருசா சம்பளம் கொடுத்துட போறோம். ஆனால் விஜய் வெளி தயாரிப்பாளரிடம் நடித்த முதல் படம் அது.
ரொம்ப கம்மியான சம்பளம் தான் வாங்குனாரு, அஜித் அந்த சம்பளத்தை கூட வாங்கவில்லை என பேசியுள்ளார்.
இந்தியாவிற்கு புறப்படவிருந்த ஈரானிய சரக்கு விமானம் மீது வான்வழித் தாக்குதல் நடத்திய அமெரிக்கா News Lankasri
ஈரான் மீது குண்டுவீச்சு... பந்தயத்தில் 160,000 டொலர் சம்பாதித்த இஸ்ரேலிய இராணுவ அதிகாரி News Lankasri