பொன்னியின் செல்வனில் விஜய், அஜித், பிரபல இயக்குனரின் ஆசை
அஜித்-விஜய்
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்கள் என ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகர்கள் விஜய், அஜித். இவர்கள் நடிப்பில் கடந்த பொங்கலுக்கு வாரிசு, துணிவு படம் திரைக்கு வந்தது.
இந்த இரண்டு படங்களுமே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று மிகப்பெரும் வசூலை பெற்றது.
இந்நிலையில் அஜித்-விஜய் இருவரும் கடைசியாக ராஜாவின் பார்வையிலே படத்தில் இணைந்து நடித்தார்கள்.
பொன்னியின் செல்வன்
இதை தொடர்ந்து இயக்குனர் கங்கை அமரன் தன் மகன் வெங்கட் பிரபுவிடம் பொன்னியின் செல்வன் நாவலை அடிக்கடி படிக்க சொல்வாராம்.

அதோடு விஜய்-அஜித்தை சந்தித்த போது கூட நீங்கள் இருவரும் இந்த கதையில் நடிக்க வேண்டும் என தன் ஆசையை கூறியதாக ஒரு பிரபல பத்திரிகையாளர் தெரிவித்துள்ளார்.
ஒருவேளை வெங்கட் பிரபு பொன்னியின் செல்வனை படித்து, விஜய், அஜித் ஓகே சொல்லியிருந்தால் பொன்னியின் செல்வனில் இன்று அஜித்- விஜய் நடித்திருப்பார்கள்.