அஜித்தின் விஸ்வாசம் படத்தை நிராகரித்த பாலிவுட் முன்னணி நடிகர்கள் !
தமிழ் ஹிட்டான பல திரைப்படங்களை ஹிந்தியில் ரீமேக் செய்து வருகின்றது பாலிவுட் திரையுலகம்.
அந்த வகையில் விக்ரம் வேதா, கைதி, மாநகரம் உள்ளிட்ட திரைப்படங்கள் தற்போது ஹிந்தியில் முக்கிய நடிகர்களை வைத்து ரீமேக் செய்து வருகின்றனர்.
சமீபத்தில் நடிகர் அஜித் நடிப்பில் கடந்த 2019 வருடம் வெளியாகி பிளாக் பஸ்டர் வெற்றியடைந்த விஸ்வாசம் படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது.
இதனிடையே தற்போது விஸ்வாசம் ஹிந்தி ரீமேக்கில் நடிக்க நடிகர்களை அணுகிய போது ஒருசில நடிகர்கள் அதனை நிகரித்ததாக கூறப்படுகிறது.
அதன்படி பாலிவுட்டில் பிரபல ஹீரோக்களான அக்ஷய் குமார் மற்றும் அஜய் தேவ்கனிடம் இப்படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும், அவர்கள் இப்படம் செட்டாகாது என நிராகரித்ததாக கூறப்படுகிறது.
மேலும் தற்போது ஒரு சில நடிகர்களிடம் இப்படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.