முதல் முறையாக என்னை அறிந்தால் படத்தில் இருந்து வெளிவந்த அன்ஸீன் வீடியோ.. இதுவரை பலரும் பார்த்திராதது
அஜித் - விடாமுயற்சி
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் அஜித். இவர் நடிப்பில் தற்போது விடாமுயற்சி திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் அஜித்துடன் இணைந்து திரிஷா, ரெஜினா, அர்ஜுன், பிரியா பவானி ஷங்கர் என பல நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள்.
மகிழ் திருமேனி இயக்கத்தில் நீரவ் ஷாவ் ஒளிப்பதிவில் விறுவிறுப்பாக இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
அஜித் நடிப்பில் வெளிவந்து மாபெரும் அளவில் வெற்றிபெற்ற திரைப்படங்களில் ஒன்று என்னை அறிந்தால். கவுதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடித்த முதல் படம் இது. இப்படத்தில் அஜித்துடன் இணைந்து அனுஷ்கா, திரிஷா உள்ளிட்ட நடிகைகள் நடித்திருந்தனர்.
அன்ஸீன் வீடியோ
மேலும் அருண் விஜய் வில்லனாக நடித்து மிரட்டியிருப்பார். மக்கள் மத்தியில் சிறந்த வரவேற்பை பெற்ற இப்படத்திலிருந்து அன்ஸீன் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
இதுவரை பலரும் பார்த்திராத அஜித்தின் என்னை அறிந்தால் படத்தின் இந்த வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ..
#YennaiArinthaal Unseen Shooting spot Video ❤️#AK ?? #AjithKumar #VidaaMuyarchi #Thala pic.twitter.com/AU5mTfgrjB
— ?️ ?????? ?️ (@Karthi_thalast) November 19, 2023