லீக்கானாத வலிமை படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர், திரையரங்கில் வைக்கப்பட்டுள்ள போட்டோ
தல அஜித் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருபவர், இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து மிக பெரிய வசூல் சாதனை படைத்து வருகிறது.
அந்த வகையில் இவர் நடிப்பில் கடைசியாக வெளியான விஸ்வாசம் மற்றும் நேர்கொண்ட பார்வை உள்ளிட்ட திரைப்படங்கள் வெற்றியடைந்துள்ளது.
அதனை தொடர்ந்து இவர் எச்.வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து வந்தார், இப்படத்தின் மீதம் உள்ள படப்பிடிப்பு விரைவில் முடிவடையவுள்ளது.
இந்நிலையில் தற்போது சென்னையில் உள்ள ஒரு பிரபல திரையரங்கில் வலிமை படத்தின் போஸ்டர் வைக்கப்பட்டுள்ளது, இதனால் நெட்டிசன்கள் ஒரு சிலர் வலிமை படத்தின் பர்ஸ்ட் லுக் லீக்காகி விட்டது என அந்த போஸ்டரை பரப்பி வருகின்றனர்.
இதனிடையே அந்த போஸ்டர் பல மாதங்களுக்கு முன்னரே அஜித் ரசிகர்கள் உருவாகியிருந்த பேன் மேட் போஸ்டர் என்றும் தெரிய வந்துள்ளது.


சீனா, பாகிஸ்தானுக்கு பெரும் பதற்றம்.... ரூ 2,000 கோடியில் ட்ரோன் உற்பத்தியை மேம்படுத்தும் இந்தியா News Lankasri
