வெளியானது வலிமை அப்டேட், படத்தின் முக்கிய வேலையை முடித்த தல அஜித்!
தல அஜித் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருபவர், இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து வசூல் சாதனை படைத்து வருகிறது.
அந்த வகையில் இவர் நடிப்பில் கடைசியாக வெளியான விஸ்வாசம் மற்றும் நேர்கொண்ட பார்வை உள்ளிட்ட திரைப்படங்கள் மிக பெரிய வசூல் சாதனை படைத்தது.
மேலும் அடுத்ததாக இவர் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் வலிமை திரைப்படத்தில் நடித்து வந்தார், மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
சமீபகாலமாக தல அஜித் தொடர்ந்து தனக்கு பிடித்த விஷயங்களை செய்து வருகிறார், அந்த வகையில் துப்பாக்கி சுடுதல் போட்டியில் கலந்து கொண்ட அஜித் பதக்கத்தையும் வென்று அசத்தியிருந்தார்.
இந்நிலையில் தற்போது தல அஜித் வலிமை படத்தின் டப்பிங் பணிகளை முடித்துவிட்டாராம், வலிமை படம் வடிவமைக்கப்பட்டுள்ளது குறித்து தல அஜித்திற்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் உள்ளதாம்.
மேலும் இப்படத்தின் இறுதி படப்பிடிப்பு ஏப்ரல் மாதத்தில் நடைபெறும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஈரான் ட்ரோன் தாக்குதலில் சிக்கிய மிகப்பெரிய எண்ணெய் கப்பல்: பதிலடியால் மிரள வைத்த ட்ரம்ப் News Lankasri
இந்தியாவிற்கு புறப்படவிருந்த ஈரானிய சரக்கு விமானம் மீது வான்வழித் தாக்குதல் நடத்திய அமெரிக்கா News Lankasri