தபு மட்டுமில்லை AK 61-ல் அஜித்துடன் பல வருடங்கள் கழித்து நடிக்கும் முக்கிய நடிகர்! யார் தெரியுமா?
நடிகர் அஜித் நடிப்பிக் இயக்குனர் எச்.வினோத் கூட்டணியில் உருவாகியிருந்த வலிமை மிக பெரிய எதிர்பார்ப்புடன் வெளியாகவிருந்தது.
ஆனால் கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் அதிகரித்ததால், கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இதனால் வலிமை திரைப்படத்தின் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டது.
இந்நிலையில் அஜித் - வினோத் - போனி கபூர் கூட்டணி AK 61 படத்திற்காக மூன்றாவது முறையாக இணையவுள்ளது. இப்படத்தின் ஷூட்டிங்கும் வரும் மார்ச் மாதம் முதல் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே AK 61 திரைப்படம் குறித்த தொடர்ந்து வெளியாகிய படி உள்ளன. அந்த வகையில் பல வருடங்கள் கழித்து நடிகை தபு அஜித்துடன் AK 61 படத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டது.
மேலும் தற்போது நடிகர் பிரகாஷ் ராஜும் இப்படத்தில் மிக முக்கிய நடிக்கவுள்ளாராம். இதற்கு முன் அஜித்துடன் பிரகாஷ் ராஜ் ஆசை, ராசி, பரமசிவன் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.
அப்படி AK 61 படத்தில் பிரகாஷ் ராஜ் உறுதியானால் 16 வருடங்களுக்கு பிறகு இவர்கள் இருவரும் சேர்ந்து நடிக்கின்றனர் எனபது குறிப்பிடத்தக்கது.