அஜித்துக்கு ஜோடியாகும் விஜய் பட நடிகை.. யார் தெரியுமா
அஜித் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்து, மாபெரும் வெற்றியடைந்துள்ள திரைப்படம் வலிமை.
இப்படத்தை தொடர்ந்து மீண்டும் எச். வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் படம் தான் AK 61.
கடந்த இரண்டு படங்களை தொடர்ந்து மீண்டும் இப்படத்தையும் போனி கபூர் தயாரிக்கிறார்.
இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிக்க, பிரபல பாலிவுட் நடிகைகளிடம் பேச்சு வார்த்தை நடந்து வருவதாக ஏற்கனவே தகவல் வெளியாகியிருந்தது.

இந்நிலையில், தற்போது AK 61 படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிக்க பூஜா ஹெக்டே பெயர் அடிபடுவதாக தகவல் தெரிவிக்கின்றனர்.
மேலும், சமீபத்தில் பூஜா அளித்த பேட்டி ஒன்றில், அஜித்துடன் இணைந்து நடிக்க விரும்புகிறேன் என்று அவர் தெரிவித்திருந்தார்.
பூஜா ஹெக்டே தற்போது தமிழில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

காதல் குறித்து மனம் திறந்த நடிகை பூஜா ஹெக்டே.. பீஸ்ட் நடிகையின் சூப்பர் பதில்