AK 61 படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிக்கப்போகும் 31 வயது நடிகை.. யார் தெரியுமா
AK 61
தமிழ் திரையுலகில் முன்னணி ஹீரோவாக இருக்கும் அஜித் அடுத்ததாக தனது AK 61 படத்தில் நடிக்கவுள்ளார்.
எச். வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தை போனி கபூர் தயாரிக்கிறார். இப்படத்தின் பூஜை இன்று போடப்பட்டது.

மேலும், AK 61 படத்திற்காக ஜிப்ரான் இசையமைக்கிறார். மேலும் இப்படத்தில் நடிகர் அஜித் இரண்டு கதாபாத்திரங்களில் நடிக்கிறார்.
இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிக்கப்போவது பாலிவுட் நடிகை தபு என்று கூறப்பட்டு வந்தது. இதனை முற்றிலும் AK 61 படக்குழு மறுத்துள்ளது.
கதாநாயகி

இந்நிலையில், AK 61 படத்தில் கதாநாயகியாக நடிக்கப்போவது நடிகை ரகுல் ப்ரீத் சிங் என்று தகவல் வெளியாகியுள்ளது.
விரைவில் இதுகுறித்து படக்குழுவிடம் இருந்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிக் பாஸ் அல்டிமேட் டைட்டில் ஜெயித்த பாலாஜி முருகதாஸ்! பரிசு தொகை இத்தனை லட்சம் தான்