AK 61 படத்தில் அஜித்திற்கு வில்லனாகும் சார்பட்டா பரம்பரை நடிகர் ! யார் தெரியுமா?
வில்லனாக நடிக்கும் சென்சேஷனல் நடிகர்
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருபவர் நடிகர் அஜித், அவர் நடிப்பில் கடந்த வலிமை திரைப்படம் வெளியாகியிருந்தது.
அப்படத்தை தொடர்ந்து மீண்டும் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் அவரின் 61-வது திரைப்படத்தில் நடித்து வருகிறார் அஜித்.
AK 61 தொடங்கும் முன்பே அனைவரின் கவனத்தை ஈர்த்துவிட்டது, ஏன்னென்றால் அப்பத்தில் அஜித்தின் கெட்டப், வினோத்தின் கதை என அனைத்து பெரிய விஷயங்களாக பார்க்கப்படுகிறது.
மேலும் நேற்று மஞ்சு வாரியர் தான் இப்படத்தின் கதாநாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார் என தகவல் வெளியாகியிருந்தது. இந்நிலையில் தற்போது அப்படத்தில் நடிகர் ஜான் கோக்கன் வில்லனாக நடிப்பதாக மற்றுமொரு தகவல் வந்துள்ளது.
சார்பட்டா பரம்பரை படத்தில் வேம்புலி கதாபாத்திரத்தின் மூலம் செம சென்சேஷன் ஆகியிருந்தார் ஜான் கோக்கன். தீவிர அஜித் ரசிகரான ஜான் கோக்கன் இதற்கு முன் வீரம் திரைப்படத்தில் அஜித்துடன் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இயக்குனர் நெல்சனை கடுமையாக விமர்சித்த நடிகர் விஜயின் தந்தை ! பீஸ்ட் பட விவகாரம்..