விக்னேஷ் சிவன் - அஜித் இணையும் படத்தின் மொத்த பட்ஜெட் எவ்வளவு தெரியுமா.. இதோ

Report

AK 62

AK 61 படத்தை தொடர்ந்து அஜித்துடைய நடிப்பில் உருவாகவுள்ள திரைப்படம் AK 62. விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகவுள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார்.

லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா கமிட்டாகியுள்ளதாக தெரியவந்துள்ளது. மேலும், இப்படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டின் இறுதிக்குள் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

படத்தின் பட்ஜெட்

விக்னேஷ் சிவன் - அஜித் இணையும் படத்தின் மொத்த பட்ஜெட் எவ்வளவு தெரியுமா.. இதோ | Ak 62 Movie Budget

இந்நிலையில், இப்படத்தின் பட்ஜெட் குறித்து தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் பட்ஜெட் ரூ. 150 கோடி என தகவல் வெளியாகியுள்ளது.

இதில் ஹீரோ அஜித்துக்கு ரூ. 105 கோடி சம்பளம். இதில் ஏற்கனவே அஜித்துக்கு ரூ. 30 கோடி அட்வான்ஸ் கொடுக்கப்பட்டு விட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கு ரூ. 11 கோடி சம்பளம். நயந்தாராவிற்கு ரூ. 10 கோடி சம்பளம்.

அனிருத்துக்கு ரூ. 5 கோடி சம்பளமாக கொடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. மொத்தமாக இவர்களின் சம்பளம் ரூ. 131 கோடியை தவிர்த்துவிட்டால், மீதமுள்ள ரூ. 19 கோடியில் தான், AK 62 படம் உருவாகவுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US