அஜித் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி! AK 62 படத்தின் அப்டேட் எப்போ தெரியுமா?
அஜித் குமார்
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத மாஸ் நடிகராக இருப்பவர் தான் அஜித் குமார். இவரின் துணிவு திரைப்படம் இந்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது.
இதையடுத்து இவரின் 62வது படத்தை எதிர்நோக்கி ரசிகர்கள் காத்துக் கொண்டு இருக்கிறார்கள். முதலில் AK 62 படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்தது. ஆனால் சில காரணங்களால் இந்த கூட்டணி கைவிடப்பட்டது.

AK 62 அப்டேட்
விக்னேஷ் சிவனுக்கு பதிலாக AK 62 படத்தை மகிழ் திருமேனி இயக்க போவதாக சொல்லப்படுகிறது. இப்படம் குறித்து எந்த தகவலும் வராத நிலையில் அஜித்தின் பிறந்த நாள் முன்னிட்டு மே1ம் தேதி AK 62 அப்டேட் வரும் என்று தகவல் வந்திருக்கிறது.
அதனால் அஜித் ரசிகர்கள் பெரிய எதிர்பார்ப்பில் இருக்கின்றனர்.

முதல் முதலில் சிவகார்த்திகேயன் நடித்த விளம்பரம் இதுவா?.. இதோ வீடியோ