ஏகே 62 படத்தின் பூஜை நடைபெற்று முடிந்தது.. தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தலைப்பு
ஏகே 62
மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடிக்கவிருக்கும் திரைப்படம் ஏகே 62. இப்படத்தை முதலில் விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்து தற்போது இந்த வாய்ப்பு மகிழ் திருமேனிக்கு கிடைத்துள்ளது.
லைக்கா தயாரிக்கும் இப்படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துகொண்டு இருக்கிறார்கள்.
பூஜை, டைட்டில்
இந்நிலையில், இப்படத்தின் பூஜை நேற்று நடந்துள்ளதாம். ஆனால், கதாநாயகன் அஜித் இந்த பூஜைக்கு வரவில்லை என்றும் தெரிவிக்கின்றனர்.
மேலும் இப்படத்தின் இசையமைப்பாளராக அனிருத் கமிட்டாகியுள்ளார். அதுமட்டுமின்றி நிரவ் ஷா தான் இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் என உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஏகே 62 படத்திற்கு மொத்தம் மூன்று டைட்டில் தேர்ந்தெடுத்துள்ளதாம். இதில் ஏதாவது ஒரு டைட்டில் மார்ச் மாதத்தின் துவக்கத்தில் முடிவு செய்யப்பட்டு, மார்ச் இரண்டாவது வாரத்தில் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என தெரியவந்துள்ளது.
ஆகையால் அஜித் ரசிகர்கள் அனைவரும் மார்ச் இரண்டாவது வாரம் வரை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
வெள்ளை உடையில் அச்சு அசல் நயன்தாரா போலவே மாறிய அனிகா.. வாய்யடைத்துப்போன ரசிகர்கள்

மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri

புதிய ஒப்பந்தம்... ஐரோப்பிய துருப்புகளுடன் ரஷ்யாவை எதிர்த்து களமிறங்கும் பிரித்தானியப் படைகள் News Lankasri
