அஜித்துடன் இணைவது குறித்து விக்னேஷ் சிவன் மற்றும் அனிருத் கொடுத்த ரியாக்ஷன்!
வலிமையை தொடர்ந்து AK 61
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான நடிகர் அஜித் தற்போது AK 61 படத்தில் நடிக்கவுள்ளார், இப்படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படம் தொடங்கும் முன்பே அஜித்தின் அடுத்த படமான AK 62 படம் குறித்த அப்டேட் இணையத்தில் பரவ தொடங்கின.
அதன்படி இன்று அப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது, சொன்னது போலவே அப்படத்தின் அறிவிப்பும் வெளியாகியுள்ளது.

AK 62 படத்தின் அறிவிப்பு
அந்த வகையில் AK 62 படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கவுள்ளதாகவும், அனிருத் இசையமைக்க இருப்பதாகவும் லைக்கா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இதனிடையே விக்னேஷ் சிவன் AK 62 படம் குறித்து பதிவிட்டுள்ளார் " எல்லாமே இனிமேல் நல்லாதான் நடக்கும், காணும் கனவெல்லாம் இறைவன் அருளால் பலிக்கும். AK 62 படத்தில் பணிபுரியும் பெரிய வாய்ப்பை அளித்த அஜித் சாருக்கு ரொம்ப நன்றி, சந்தோஷத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியவில்லை" என பதிவிட்டுள்ளார்.
எல்லாமே இனிமேல் நல்லாதான் நடக்கும்❤️?
— Vignesh Shivan (@VigneshShivN) March 18, 2022
காணும் கனவெல்லாம் இறைவன் அருளால் பலிக்கும் ??
Thank U #AjithSir for this greatest opportunity to work with you for the prestigious #AK62
Words can’t explain the happiness ?
With my king @anirudhofficial again ? & @LycaProductions ☺️? pic.twitter.com/xFnT8jGSEf
மேலும் அனிருத் "மீண்டும் AK-க்கு இசையமைக்க உற்சாகமாக உள்ளது" என பதிவிட்டுள்ளார்.
Excited to score for AK sir again in #AK62 ??? A @VigneshShivN directorial will always be a musical special ❤️❤️❤️ @LycaProductions onwards and upwards ??? pic.twitter.com/qLWaCmH5G8
— Anirudh Ravichander (@anirudhofficial) March 18, 2022
வலிமை படம் போல RRR படமும் ஆகிவிடுமா ! என்ன காரணம் தெரியுமா?