இந்த தேதியில் தான் தொடங்குகிறது AK62! அஜித் ரசிகர்கள் கொண்டாடும் தகவல்
அஜித்
துணிவு படத்தின் ஷூட்டிங்கை முடித்துவிட்டு அதன் பின் பைக் ரைடு மற்றும் தன் குடும்பத்துடன் தான் நேரத்தை செலவிட்டு வருகிறார் அஜித். துணிவு ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்கு அவர் வருவார் என முன்பு செய்தி பரவிய நிலையில் 'நல்ல படத்திற்கு அதுவே விளம்பரம்' என சொல்லி வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார் அஜித்.
தற்போது அஜித் புத்தாண்டை குடும்பத்துடன் கொண்டாடி இருக்கும் ஸ்டில்கள் வெளியாகி வைரல் ஆகி கொண்டிருக்கிறது.

AK62 ஷூட்டிங் எப்போ?
இந்நிலையில் அஜித் அடுத்து விக்னேஷ் சிவன் உடன் கூட்டணி சேர்ந்து இருக்கும் AK62 படத்தின் ஷூட்டிங் எப்போது தொடங்கும் என்கிற தகவல் வெளியாகி இருக்கிறது.
வரும் ஜனவரி 17ம் தேதி ஷூட்டிங் தொடங்கி 4 மாதங்கள் தொடர்ந்து ஷூட் செய்து முடிக்க திட்டமிட்டு இருக்கிறார்களாம்.
படம் தீபாவளிக்கு ரிலீஸ் செய்யும் வகையில் அனைத்து பணிகளையும் செய்ய திட்டமிட்டு இருக்கின்றனர் என தெரிகிறது.

அதிதி ஷங்கரா இது.. ஒல்லியாகி இப்படி மாறிட்டாரே