AK 63 படத்தின் இயக்குனர் இவர் தான்.. அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவுள்ள அஜித், ரசிகர்கள் அப்செட்
நடிகர் அஜித் லைன் அப்
அஜித் தற்போது எச். வினோத் இயக்கத்தில் AK 61 படத்தில் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இப்படத்தை தொடர்ந்து முதல் முறையாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தனது AK 62 படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது.
இப்படத்திற்கு பின் அஜித் மீண்டும் சிறுத்தை சிவா கூட்டணியில் தனது AK 63 படத்தில் நடிக்கவுள்ளார் என்பது போல் தகவல் கிசுகிசுக்கப்பட்டு வந்தது.
சிறுத்தை சிவா ஒபன் டாக்
இந்நிலையில், இதை குறித்து இயக்குனர் சிறுத்தை சிவாவிடம் கேட்டபோது," இதை அஜித் சாரே அதிகாரப்பூர்வமாக சொல்லுவார் " என்று கூறியுள்ளார்.
இதன்முலம், AK 63 படத்தை இயக்கப்போவது சிறுத்தை சிவா தான், என்பது 99% சதவீதம் உறுதியாகியுள்ளது. ஆனால், இந்த தகவல் அஜித்தின் ரசிகர்களை அப்செட் செய்துள்ளது.

பாக்., சீனாவுக்கு கவலையளிக்கும் செய்தி - Tejas MK1 போர் விமானங்களை மேம்படுத்தும் இந்தியா News Lankasri
