AK 61 படத்தில் முதல் ஆளாக தனது படப்பிடிப்பை முடித்த நடிகர் ! வெளியான லேட்டஸ்ட் புகைப்படம்..
AK 61
தமிழ் சினிமவின் உச்ச நட்சத்திரமான நடிகர் அஜித் நடிப்பில் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் AK 61.
வலிமை படத்தை தொடர்ந்து மீண்டும் இணைந்துள்ள கூட்டணி மீது அனைவரும் பெரிய எதிர்பார்ப்பை வைத்துள்ளனர். வலிமை திரைப்படம் கலவையான விமர்சனங்களையே அதிகமாக பெற்றதால் தற்போது இந்த படமாவது வினோத்தின் ஸ்டைலில் இருக்க வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.
விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இப்படத்தின் ஷூட்டிங் ஹைதெராபாத்தில் நடைபெற்று வருகிறது. மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி உள்ளிட்ட நடிகர்கள் அப்படத்தில் நடிப்பதாக ஏற்கனவே தகவல் வெளியாகியிருந்தது.
இந்நிலையில் தற்போது AK 61 படத்தில் நடித்து வந்த நடிகர் வீரா முதல் ஆளாக அப்படத்தில் தனது ஷூட்டிங்கை முடித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் நடிகர் அஜித்துடன் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படமும் தற்போது வெளியாகியுள்ளது. இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.
ரஜினியின் பட வசூலை முறியடிக்க வெறும் மூன்றே நாட்களை எடுத்துக்கொண்ட விக்ரம்..