AK 61 படத்தில் அஜித்துடன் நடிக்கும் சூப்பர் ஸ்டார் நடிகர் ! யார் தெரியுமா?
நடிகர் அஜித் நடிப்பிக் இயக்குனர் எச்.வினோத் கூட்டணியில் உருவாகியிருந்த வலிமை மிக பெரிய எதிர்பார்ப்புடன் வெளியாகவிருந்தது.
ஆனால் கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் அதிகரித்ததால், கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இதனால் வலிமை திரைப்படத்தின் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டது. மேலும் தற்போது இப்படம் வரும் பிப்ரவரி 24 ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் அஜித் - வினோத் - போனி கபூர் கூட்டணி AK 61 படத்திற்காக மூன்றாவது முறையாக இணையவுள்ளது.
AK 61 திரைப்படம் குறித்த அப்டேட்ஸ் தொடர்ந்து வெளியாகிய படி உள்ளன. அந்த வகையில் அஜித்துடன் தபு மற்றும் பிரகாஷ் ராஜ் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் தற்போது மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால்-யை AK 61 படக்குழு அப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க அணுகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் மோகன்லால் மற்றும் போனி கபூர் ஒன்றாக எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் இணையத்தில் பரப்பி வருகின்றனர்.