ஆகாயத்தில் ஒரு நாள்(AOT) திரை விமர்சனம்

Report

துல்கர் சல்மான் மலையாள நடிகர் என்பதை தாண்டி தற்போது தெலுங்கு சினிமாவில் தான் கொடிகட்டி பறக்கிறார், அந்த வகையில் பவன் இயக்கத்தில் துல்கர், சாத்விகா நடிப்பில் வெளிவந்துள்ள தெலுங்கு படத்தின் தமிழ் டப்பிங் ஆன ஆகாசத்தில் ஒரு நாள் எப்படி? என்பதை பார்ப்போம்.

ஆகாயத்தில் ஒரு நாள்(AOT) திரை விமர்சனம் | Akasamlo Oka Tara Movie Review

ஓம்: Operation Mole திரை விமர்சனம்

ஓம்: Operation Mole திரை விமர்சனம்

கதைக்களம்

குக் கிராமல் ஒன்றில் கல்பனா(சாத்விகா) நன்றாக படித்து Astronaut ஆக வேண்டும் என கனவோட இருந்து வருகிறார். அந்த நேரத்தில் கல்பனா அப்பா 10வது பரீட்சை எழுதிய அடுத்த நாளே துல்கருக்கு திருமணம் செய்து வைக்கின்றார்.

திருமணம் முடிந்து முதலிரவில் தான் துல்கருக்கு தெரிகிறது, கல்பனா வயது 16 என்று, இதனால் வருத்தப்பட்டு அவர், உனக்கு என்ன ஆக வேண்டும் என கேட்க, அதற்கு அவரும் அஸ்ட்ரோனண்ட் தான் என் கனவு என சொல்கிறார்.

ஆகாயத்தில் ஒரு நாள்(AOT) திரை விமர்சனம் | Akasamlo Oka Tara Movie Review

இதை தொடர்ந்து மாநில அளவில் கல்பனா நல்ல மதிப்பெண் எடுக்க, துல்கர் நீ படிக்கிற வேலையை மட்டும் செய், உனக்காக நான் இருக்கிறேன் என படிக்க வைக்கிறார். கல்பனாவும் கடுமையாக படித்து ராக்கெட் செய்யும் போட்டி ஒன்றில் கலந்துக்கொள்கிறார்.

அந்த ராக்கெட்-யை வெற்றிகரமாக அவர்கள் சொன்ன விதிகளுக்குள் பறக்க வைத்துவிட்டால் ஆஸ்ட்ரோனண்ட் ஆகிவிடலாம் என்ற கனவில் இருக்கும் போது அந்த ராக்கெட் வெடித்து சிதற, கல்லூரியிலிருந்து கல்பனா சஸ்பெண்ட் செய்ய பிறகு கல்பனா கனவு நிறைவேறியதா? என்பதே மீதிக்கதை.

ஆகாயத்தில் ஒரு நாள்(AOT) திரை விமர்சனம் | Akasamlo Oka Tara Movie Review

படத்தை பற்றிய அலசல்

துல்கர் இப்படி ஒரு கதையை தேர்தெடுத்ததற்காகவே பாராட்டுக்கள், எந்த ஒரு முன்னணி ஹீரோவும் தயங்கும் ஒரு பெண்ணுக்கு முக்கியத்துவம் உள்ள கதையில் துல்கர் படம் முழுவதும் தன் மனைவிக்கு சப்போர்ட் செய்து அவர் கனவுக்காக இவர் படும் கஷ்டம் என, பல இளம் பெண்கள் இப்படி ஒரு கணவர் நமக்கு அமைய வேண்டும் என ஏங்கும் அளவிற்கு சிறப்பாக நடித்துள்ளார்.

சாத்விகா கல்பனா கதாபாத்திரத்தில் வாழ்ந்து தான் உள்ளார், இதுதான் முதல் படம் என்றால் நம்ப முடியாத அளவிற்கு சிறப்பான நடிப்பு, அதிலும் அவர் கண்களில் கனவை தேடும் ஏக்கம், அதற்காக அவர் போடும் உழைப்பு என மிகச்சிறந்த அறிமுகம்.

ஆகாயத்தில் ஒரு நாள்(AOT) திரை விமர்சனம் | Akasamlo Oka Tara Movie Review

படத்தின் முதல் பாதி கல்பனா கனவை தேடியே சென்றாலும், துல்கரின் தியாகம் குறிப்பாக தன் அக்காவிடம் நீ டாக்டர் ஆகவேண்டும் என நினைத்தாய், அப்போது என்னால் முடியவில்லை, தற்போது கல்பனா கனவில் உன்னை பார்க்கிறேன் அக்கா என சொல்லி அக்கா ஸ்வாசிகாவிடம் கல்பனா கனவு குறித்து சொல்லும் இடமெல்லாம் செம எமோஷ்னல்.

படத்தின் இரண்டாம் பாதி கனவுகளை தொலைத்து வீட்டு வேலைகளை பார்க்கும் சாமனிய பெண்ணாக கல்பனா இருக்க, இல்லை இதுதான் உன் உலகம் என துல்கர் மீண்டும் கல்பனா கனவை தூண்டுகிறார், அதோடு மட்டுமில்லாமல் ராக்கெட் செய்யும் கம்பெனி நடத்தும் ஸ்ருதியிடம் அவர் கொண்டு சேர்க்கும் இடம், அங்கிருந்து கல்பனா கனவு மீண்டும் தொடங்குவது என மீண்டும் படம் சூடு பிடிக்கின்றது.

ஆகாயத்தில் ஒரு நாள்(AOT) திரை விமர்சனம் | Akasamlo Oka Tara Movie Review

ஆனால் இத்தனை மோட்டிவேஷன் படத்தில் பெரிய தாக்கம் என்றே எந்த காட்சிகளும் இல்லை, அடுத்தடுத்து என சென்று கொண்டே தான் இருக்கிறது, ஆனால், எங்கும் போர் அடிக்கவில்லை, இந்த மாதிரி மோட்டிவேஷன் படத்தில் இன்னமும் பவுன்ஸ்பேக் ஆகும் காட்சிகள் அழுத்தமாக இருந்திருக்கலாம்.

டெக்னிக்கல் ஆக ஒளிப்பதிவு, இசை என அனைத்தும் பிரமாதம், அதிலும் ஜிவி இசை படத்தின் மற்றொரு நாயகன் போல் ஆக்ரமித்துள்ளது.

க்ளாப்ஸ்

கதைக்களம்

படத்தில் நடித்த அனைவருமே, குறிப்பாக துல்கர், சாத்விகா.

ஜிவி இசை

கல்வி எவ்வளவு முக்கியம், அதுவும் பெண்களுக்கு என்பதை காட்டிய விதம்.

கிளைமேக்ஸ்

பல்ப்ஸ்

  • படம் எந்த கால கட்டத்தில் நடக்கிறது என்ற குழப்பம்.

மொத்தத்தில் ஆகாயத்தில் ஒரு நாள் கண்டிப்பாக எல்லோரும் கல்பனாவின் இந்த கனவுடன் சேர்ந்து பயணிக்கலாம்.

ஆகாயத்தில் ஒரு நாள்(AOT) திரை விமர்சனம் | Akasamlo Oka Tara Movie Review

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US