பாரதி கண்ணம்மா சீரியல் குழுவினரால் வெளியேற்றப்பட்டாரா அகில்- அவரே கூறிய உண்மை தகவல்
பாரதி கண்ணம்மா சீரியல் பிரபலங்கள் மக்களுக்கு நன்கு பரீட்சயப்பட்ட முகமாக மாறிவிட்டனர். அந்த அளவிற்கு சீரியல் மக்கள் மனதில் பெரிய இடத்தை பிடித்துள்ளது.
சீரியலில் அடுத்தடுத்து அதிரடி திருப்பங்கள் ஏற்பட ஒருவர் தொடரில் இருந்து வெளியேறியுள்ளார். அவர் வேறுயாரும் இல்லை அகில் தான், அவருக்கு பதிலாக புதிய நடிகர் நடிக்க தொடங்கிவிட்டார், அவர் யார் என புகைப்படமும் வெளியாகிவிட்டது.
இந்த நிலையில் அகில் சீரியல் குழுவினரால் தான் சில காரணங்களால் வெளியேற்றப்பட்டார் என ஒரு செய்தி உலா வருகிறது.
செய்தி அகில் காதுக்கு எட்ட அவர் அதற்கு ஒரு பேட்டியில் பதில் அளித்துள்ளார்.
அதில் அவர், சீரியலில் இருந்து என்னை யாரும் வெளியேற்றவில்லை, நானே தான் சீரியலில் இருந்து வெளியேறினேன்.
காரணம் அடுத்தடுத்த பட வாய்ப்புகள் வருகிறது, தொடர்ந்து இரண்டிலும் பயணிக்க முடியவில்லை எனவே இந்த முடிவு எடுத்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

எங்கள் பிரிவுக்கு அந்த நபர் மட்டுமே காரணம்; இது திட்டமிட்ட சதி - அதிர்ச்சி கொடுத்த ஆர்த்தி IBC Tamilnadu
