2006-லேயே ஹீரோயினாக நடித்திருக்கும் பிக் பாஸ் 5 பிரபலம்..யாரும் அறியாத ஷாக்கிங் தகவல்
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராக இருப்பவர் அக்ஷரா ரெட்டி.
இவருக்கு ஏற்கனவே ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் ஆர்மிகள் வைக்க தொடங்கிவிட்டனர். அந்த அளவிற்கு இவர் ரசிகர்களை நாளுக்கு நாள் சம்பாதித்து வருகிறார்.
பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினாலும் இவரை தேடி படவாய்ப்புகள் வரும் என்பதில் சந்தேகம் இல்லை.
இந்நிலையில் இவரை குறித்த அறியப்படாத தகவல் ஒன்று தான் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதாவது கடந்த 2006-ம் ஆண்டிலேயே புதுமுக நடிகர்களுடன் சேர்ந்து 'தீண்ட தீண்ட' என்ற படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கிறார் அக்ஷரா ரெட்டி.
ஆனால் இந்த செய்தி பெரும்பாலானோருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. தற்போது படத்தின் போஸ்டரில் இடம்பெற்றிருக்கும் அக்ஷராவின் புகைப்படம் தான் பலராலும் பகிரப்பட்டு வருகிறது.
