இயக்குனர் ஏ.எல்.விஜய் காரை இடித்து தாக்குதல் நடத்திய போதை நபர்! போலீஸ் ஸ்டேஷனில் புகார்
ஏ.எல் விஜய் தமிழில் ஏராளாமான படங்களை இயக்கி முக்கிய இயக்குனராக இருப்பவர். மதராஸபட்டினம், அஜித்தின் கிரீடம், விஜய்யின் தலைவா உள்ளிட்ட பல படங்களை இயக்கி இருக்கிறார்.
இரண்டாம் திருமணத்திற்கு பிறகு ஏ.எல் விஜய் சமீபத்தில் புது வீடு கட்டி அதில் குடியேறி இருக்கிறார். அதன் கிரஹப்ரவேசத்திற்கு பல பிரபலங்கள் கலந்துகொண்டனர்.
தாக்குதல் நடத்திய நபர்
இயங்குனர் ஏ.எல்.விஜய் பயணித்த காரை இடித்து தாக்குதல் நடத்திய போதை நபர் பற்றி போலீசில் புகார் அளிக்கப்பட்டு இருக்கிறது.
இன்று காலை ஏ.எல்.விஜய் காரில் சென்றபோது எதிரில் தவறான பாதையில் பைக்கில் வந்த நபர் மீது காரின் கண்ணாடி உரசிவிட்டதாம். அது தொடர்பாக ஏ.எல்.விஜய்யின் காரை ஹெல்மெட் கொண்டு அந்த நபர் தாக்கி இருக்கிறார்.
அதன் பின் உள்ளே இருந்த விஜய் மற்றும் அவரது மேனேஜர் மீதும் தாக்குதல் நடத்தி இருக்கிறார். இது தொடர்பாக சம்பவ இடத்தில் இருந்தே போலீசுக்கு ஏ.எல்.விஜய் தகவல் கொடுத்து இருக்கிறார். அதன் பின் நேரடியாக காவல் நிலையம் சென்று புகார் அளித்துவிட்டு தான் அவர் வந்திருக்கிறார்.
நான் இருந்த இடத்தில் ஒரு பெண் இருந்திருந்தால் குடிபோதையில் வந்த அந்த நபரை எப்படி சமாளித்து இருப்பார். அதனால் தான் போலீசில் புகார் அளித்திருக்குகிறேன் என விஜய் பேட்டி கொடுத்திருக்கிறார்.