பாலிவுட் வரை பரவும் புகழ்.. Lokah படம் குறித்து நடிகை ஆலியா பட் அதிரடி பதிவு!
Lokah
டொமினிக் அருண் இயக்கத்தில் நடிகை கல்யாணி ப்ரியதர்ஷன் நடிப்பில் உருவாகி கடந்த வாரம் வெளிவந்த படம் Lokah. இப்படத்தை முன்னணி ஹீரோவான துல்கர் சல்மான் தயாரித்திருந்தார்.
படம் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. நஸ்லன், சாண்டி மாஸ்டர் ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
சூப்பர் ஹீரோ கதைக்களத்தில் உருவாகி வெளிவந்த இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது.

ஓபன் பதிவு!
இந்நிலையில், பாலிவுட் நடிகை ஆலியா பட் இப்படத்தை பாராட்டி பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.
அதில், "கிராமத்து தொன்மைக் கதையையும் மர்மத்தையும் இணைத்து உருவாகிய புதிய கலவை இந்த படம். இந்தப் படத்துக்குக் கிடைக்கும் அன்பினால் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.
சினிமாவில் இது போன்ற படங்களுக்கு நான் எப்போதும் என் அன்பையும் ஆதரவையும் காட்ட ஆவலுடன் இருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

2025ம் ஆண்டு பிரித்தானியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை: புள்ளிவிவரம் News Lankasri
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri
என் வாழ்க்கையில் வில்லியாகிவிட்டீர்கள்... அம்மா குறித்து ஆர்த்தி ரவி பகிர்ந்த உருக்கமான பதிவு! Manithan