வீடு, கார், வைர நகை.. ஆலியா - ரன்பீர் ஜோடிக்கு கோடி கணக்கில் வந்த திருமண கிப்ட்
பாலிவுட்டின் லேட்டஸ்ட் காதல் ஜோடி ரன்பீர் மற்றும் ஆலியா பட் ஜோடி கடந்த ஏப்ரல் 14ம் தேதி திருமணம் செய்து கொண்டனர். அதில் குடும்பத்திற்கு மிக நெருக்கமானவர்கள் மட்டுமே கலந்துகொண்டதாக தகவல்கள் வந்தது.
திருமண புகைப்படங்களும் இணையத்தில் அதிகம் வைரல் ஆனது. "we can’t wait to build more memories together … memories that are full of love, laughter, comfortable silences, movie nights, silly fights, wine delights and Chinese bites" என ஆலியா இன்ஸ்டாவில் பதிவிட்டு இருந்தார்.

கிப்ட்
ஆலியா - ரன்பீர் ஜோடிக்கு சினிமா நட்சத்திரங்கள் பலரும் விலையுயர்ந்த பொருட்களை கிப்ட்டாக கொடுத்து இருக்கின்றனர். வீடு, கார் தொடங்கி பைக், வைர நெக்லஸ் வரை லிஸ்ட் நீள்கிறது.
யார் யார் என்ன கிப்ட் கொடுத்தார்கள் என பார்க்கலாம்.
- கரீனா கபூர்: 3.1 லட்சம் மதிப்புள்ள வைர நகை
- ரன்வீர் சிங்: Kawasaki Ninja H2R பைக் (விலை 82 லட்சம் ருபாய்)
- தீபிகா படுகோன்: 15 லட்சம் மதிப்புள்ள வாட்ச்
- சித்தார்த் மல்ஹோத்ரா: 3 லட்சம் ரூ. ஹாண்ட் பேக்
- வருண் தவான்: 4 லட்சம் ரூ. high heel Gucci sandal
- பிரியங்கா சோப்ரா: வைர நெக்லஸ் (9 லட்சம் ரூ.)
- நீது கபூர் (ரன்பீர் கபூர் அம்மா): 26 கோடி ரூபாய்க்கு 6BHK வீடு
- கத்ரினா கைப்: 14.5 லட்சம் ருபாய்க்கு பிளாட்டினம் ப்ரேஸ்லெட்
- அயான் முகர்ஜி (ப்ரம்மாஸ்திரா பட இயக்குனர்): 1.3 கோடி ரூ. ஆடி Q8 கார்
- அர்ஜுன் கபூர்: 1.5 லட்சம் ரூ. ஜாக்கெட்
- அனுஷ்கா ஷர்மா: 1.6 லட்சம் ரூ. மனிஷ் மல்ஹோத்ரா டிசைனர் உடை..ஆலியாவுக்கு.




