முதல் முறை வெளியான ஆலியா பட் - ரன்பீர் கபூரின் 1 வயது மகளின் போட்டோ.. யாரை போல இருக்கிறார் பாருங்க
ஹிந்தி நடிகர் ரன்பீர் கபூர் தற்போது அனிமல் படத்தின் வெற்றியின் மூலம் கெரியரின் உச்சத்தை தொட்டிருக்கிறார். இந்த படம் 800 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்து சாதனை படைத்து வருகிறது.
ரன்பீர் கடந்த வருடம் நடிகை ஆலியா பட் உடன் காதல் திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு 2022 நவம்பரில் பெண் குழந்தை பிறந்தது. அவருக்கு ராஹா கபூர் என பெயரிட்டு இருக்கின்றனர்.
முதல் முறையாக வெளியான போட்டோ
ரன்பீர் மற்றும் ஆலியா பட் ஜோடி கடந்த ஒரு வருடமாக மகள் போட்டோவை வெளியிடாமல் தான் இருந்தனர். அவர்கள் வெளியில் குழந்தை உடன் வரும்போது பத்திரிகையாளர்களையும் போட்டோ எடுக்காதீங்க என கூறிவிடுவார்கள்.
இந்நிலையில் தற்போது கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்கு பின் மகள் ராஹா உடன் ரன்பீர் மற்றும் ஆலியா போஸ் கொடுத்திருக்கும் ஸ்டில்கள் வைரல் ஆகி இருக்கிறது.
முதல் முறையாக ராஹாவின் முகத்தை பார்த்த நெட்டிசன்கள் அவர் யாரை போல இருக்கிறார் என கமெண்ட் செய்து வருகின்றனர்.
அவர் ஆலியா போல தான் இருக்கிறார் என பலரும் கூறி வருகின்றனர்.




கடலில் நீராடிய 10க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு கால் முறிவு - திருச்செந்தூரில் பரபரப்பு! IBC Tamilnadu
