டிரைவருக்கு மிகப்பெரிய தொகையை தூக்கிக் கொடுத்த ஆலியா பட்! அதுவும் இத்தனை லட்சமா
பொதுவாக சினிமா துறையில் முன்னணியில் இருக்கும் நடிகர் நடிகைகள் தங்களிடம் பணியாற்றும் உதவியாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு பெரிய அளவில் உதவிகள் செய்வார்கள். அதுவும் தாராளமாகவே செய்வார்கள்.
பணியாளர்களுக்கு இடம் வாங்கி வீடு கட்டிக் கொடுத்த நடிகர்களும் தமிழ் சினிமாவில் இருக்கிறார்கள்.
இந்நிலையில் ஹிந்தி நடிகை ஆலியா பட் தனது வீட்டு வேலைக்காரர் மற்றும் டிரைவர் என இருவருக்கும் செய்திருக்கும் மிகப்பெரிய உதவி பற்றிய தகவல் வெளியாகியிருக்கிறது.
Rs.50 லட்சம் கொடுத்த ஆலியா பட்
வீட்டின் பணியாளர் மற்றும் டிரைவர் என இருவருக்கும் தலா 50 லட்சம் ரூபாய் கொடுத்து வீடு வாங்கிக் கொள்ள சொல்லி இருக்கிறார் ஆலியா பட்.
அவர்களும் மும்பையில் முக்கிய இடத்தில் தற்போது வீடு வாங்க இருக்கிறார்கள். இந்த தகவல் வெளியாகி வைரலாக பலரும் ஆச்சர்யம் அடைந்திருக்கிறார்கள்.