ஒரு இன்ஸ்டா போஸ்டுக்கு இவ்வளவா.. கோடிகளில் சம்பாதிக்கும் நடிகை ஆலியா பட்
நடிகர்கள் சினிமாவில் நடிப்பதில் மூலம் பெறும் சம்பளத்தை விட விளம்பரத்தில் நடிப்பதன் மூலம் சம்பாதிப்பது தான் அதிகம். விளையாட்டு வீரர்களும் அப்படித்தான்.
இன்ஸ்டாகிராம்
சமூக வலைத்தளங்களின் வளர்ச்சிக்கு பிறகு அதில் மில்லியன் கணக்கில் ரசிகர்கள் வைத்திருக்கும் நடிகர்கள் ஒரு போஸ்டுக்கு கோடிக்கணக்கில் வாங்க தொடங்கிவிட்டார்கள். பெரிய நிறுவனங்கள் விமம்பரத்திற்காக அதையும் தர தயாராக இருக்கின்றனர்.

1 கோடி வாங்கும் ஆலியா பட்
இப்படி ஆலியா பட் இன்ஸ்டாவில் ஒரு போஸ்ட் போட ஒரு கோடி ருபாய் சம்பளமாக வாங்குகிறார். அவருக்கு 63.9 மில்லியன் ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அமிதாப் பச்சன் 26 மில்லியன் ரசிகர்கள் வைத்திருக்கும் நிலையில் அவருக்கு ஒரு போஸ்டுக்கு 50 லட்சம் ருபாய் கிடைக்கிறதாம்.
சர்வதேச அளவில் பாப்புலர் ஆன பிரியங்கா சோப்ரா ஒரு போஸ்டுக்கு 1.8 கோடி ருபாய் சம்பாதிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.