பாலிவுட் திரையுலகின் பணக்கார குழந்தை.. ரன்பீர் கபூர் - ஆலியா பட் மகளுக்கு இத்தனை கோடி சொத்து இருக்கா
ரன்பீர் கபூர் - ஆலியா பட்
பாலிவுட் திரையுலகின் நட்சத்திர ஜோடி ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட். இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். கடந்த 2022ஆம் ஆண்டு மிகவும் பிரம்மாண்டமான முறையில் இவர்களுடைய திருமணம் நடைபெற்றது.
பாலிவுட் திரையுலகை சேர்ந்த பல நட்சத்திரங்கள் இவர்களுடைய திருமணத்தில் கலந்துகொண்டனர். நட்சத்திர தம்பதியான ரன்பீர் கபூர் - ஆலியா பட்-க்கு ஒரு மகளும் உள்ளார். அவளுடைய பெயர் ரஹா கபூர்.
கடந்த சில சில மாதங்களுக்கு முன் தான் தங்களுடைய மகளை அனைவருக்கும் அறிமுகம் செய்து வைத்தனர். அந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் படு வைரலானது.
பணக்கார குழந்தை
இந்த நிலையில், ரன்பீர் கபூர் - ஆலியா பட் தங்களது மகளுக்காக ரூ. 250 கோடி செலவு செய்து புதிய பங்களா ஒன்று வாங்கியுள்ளதாக பாலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.
மும்பையில் உள்ள பாந்த்ரா எனும் இடத்தில் தங்களது மகள் ரஹா கபூர் என்கிற பெயரில் தான் இந்த பங்களாவை வாங்கியுள்ளாராம்.
இதன்மூலம் பாலிவுட்டின் பணக்கார குழந்தை ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட்-ன் குழந்தை ரஹா கபூர் தான் என பாலிவுட் பத்திரிகைகளில் குறிப்பிட்டு வருகிறார்கள்.

15 வயதில் திருமணம், கணவர் இல்ல, மகன்களை வளர்க்க இத செய்தேன்.. பாக்கியலட்சுமி செல்வி எமோஷனல் Manithan
