ராஜமௌலியுடன் சண்டையா? சர்ச்சைக்கு பதிலடி கொடுத்த நடிகை ஆலியா பட்
பாலிவுட் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் நடிகை ஆலியா பட் சமீபத்தில் ராஜமௌலி இயக்கத்தில் வெளிவந்த RRR படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்.
இப்படம் கலவையான விமர்சங்களை பெற்றிருந்தாலும், வசூல் ரீதியாக பாக்ஸ் ஆபிசில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதுவரை ரூ. 550 கோடியை வசூலில் கடந்துள்ளது என்று தகவல் தெரிவிக்கின்றனர்.

அதிருப்தியில் ஆலியா பட் ?
RRR படத்தில் சில காட்சிகள் மட்டுமே வந்தது போல் காட்டியதால், ராஜமௌலி மீது அதிருப்தியில் நடிகை ஆலியா பட் இருக்கிறார் என, சமீபத்தில் பெரும் சர்ச்சை சமுக வலைத்தளங்களில் எழுந்தது.
அதற்கு, முக்கிய காரணமாக RRR படக்குழுவுடன் ஆலியா பட் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் இருந்து தீடீரென நீக்கியது தான் என்று கூறப்பட்டது.
இந்நிலையில், அனைத்து சர்ச்சைக்கும் பதிலடி கொடுக்கும் விதத்தில், நடிகை ஆலியா பட் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

சர்ச்சைக்கு பதிலடி கொடுத்த நடிகை..
இந்த அறிக்கையில், தான் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பழைய புகைப்படங்களை சில நாட்கள் மட்டுமே வைத்துக்கொள்வேன் என்றும், அதன்பின் அவைகளை நீக்கிவிடுவேன், இதுவே எனது வழக்கம் என்று அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், எனக்கும் ராஜமௌலிக்கும் எந்த ஒரு பிரச்சனை இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். எனக்கு RRR படத்தில் நடித்தது சந்தோசம் தான். ராம் சரண் மற்றும் தாரக்குடன் நடித்ததும் மகிழ்ச்சியே என்று கூறி அனைத்து சர்ச்சைக்கும் பதிலடி கொடுத்துள்ளார் ஆலியா பட்

பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் 14.2 ஓவரிலேயே..157 ரன் இலக்கினை எட்டி ஷதாப் கான் அணி அபார வெற்றி News Lankasri
48 மணி நேரத்தில் நரக மழை பொழியும் - ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை News Lankasri