அந்த தென்னிந்திய நடிகருடன் நடிக்க ஆசைப்படும் நடிகை ஆலியா பட்.. யார் அந்த நடிகர் தெரியுமா
ஆலியா பட்
19 வயதில் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகி இன்று உலகளவில் பிரபலமாகியுள்ளார் நடிகை ஆலியா பட். Student of the Year திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். தொடர்ந்து ரசிகர்ளை கவரும் வகையில் நடித்து வந்த ஆலியா பட் பல ஹிட் திரைப்படங்களை கொடுத்தார்.
மேலும் தற்போது ஆலியா பட் கைவசம் Alpha மற்றும் லவ் & வார் ஆகிய படங்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர் ரன்பீர் கபூரை காதலித்து கடந்த 2022ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு அழகிய மகள் உள்ளார்.
பகத் பாசில்
இந்த நிலையில், நடிகை ஆலியா பட் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தென்னிந்திய நடிகர் பகத் பாசில் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.
அவர் கூறியதாவது, "பகத் பாசில் மிகவும் அற்புதமான நடிகர். அவர் நடித்த ஆவேசம் திரைப்படம் எனக்கு பிடித்த திரைப்படங்களில் ஒன்று. என்றாவது ஒரு நாள் அவருடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறேன்" என கூறியுள்ளார்.
மலையாளத்தில் அறிமுகமாகி தற்போது தென்னிந்திய அளவில் கலக்கிக்கொண்டிருக்கும் நடிகர் பகத் பாசில் குறித்து நடிகை ஆலியா பட் கூறியது தற்போது ரசிகர்கள் மத்தியில் படுவைரலாகி வருகிறது.