சமந்தா இந்த குணம் கொண்டவர்.. நடிகை ஆலியா பட் கூறிய அதிர்ச்சி தகவல்
சமந்தா
தமிழ் சினிமா மூலம் அறிமுகமாகி பிறகு தெலுங்கு சினிமாவில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி தனக்கென ஒரு இடத்தை பிடித்து தற்போது ஜொலித்து கொண்டு இருப்பவர் நடிகை சமந்தா.
தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் ஏராளமான படங்களில் நடித்து முன்னணி நாயகியாக வலம் வரும் சமந்தா உடல் நிலை சரி இல்லாத காரணத்தினால் சற்று சினிமாவை விட்டு விலகி இருந்தார்.
தற்போது, மீண்டும் சினிமாவில் களம் இறங்கிய சமந்தா நேற்று நடைபெற்ற நடிகை ஆலியா பட் நடிப்பில் வெளியாக உள்ள 'ஜிக்ரா' படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்.
ஆலியா பட் கூறிய தகவல்
அவரை தொடர்ந்து, சிறப்பு விருந்தினராக இயக்குனர் திரிவிக்ரம் கலந்து கொண்டுள்ளார். அப்போது அந்த நிகழ்ச்சியில் சமந்தா குறித்து நடிகை ஆலியா பட் சில விஷயங்களை பகிர்ந்துள்ளார்.
அதில், சமந்தா படத்தில் மட்டுமில்லாமல் நிஜத்திலும் ஒரு நாயகி தான். அவருடன் இணைந்து படத்தில் நடிக்க வேண்டும் என்று எனக்கு ஆசை உள்ளது. திரிவிக்ரம் இயக்கும் படத்தில் நானும் சமந்தாவும் இணைந்து நடித்தால் நன்றாக இருக்கும்" என்று கூறியுள்ளார்.
மேலும், இயக்குனர் திரிவிக்ரம் பேசுகையில், ரஜினிகாந்த் போன்று அனைத்து மொழிகளிலும் புகழ்பெற்ற நடிகையாக சமந்தா திகழ்கிறார்" என்று பாராட்டியுள்ளார்.

இவர்களின் வாழ்க்கையில் வெற்றி உறுதி! இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவனின் செல்ல பிள்ளைகளாம்... Manithan
