புஷ்பா எபெக்ட்.. அல்லு அர்ஜுனுடன் நடிக்க போட்டிபோடும் பாலிவுட் ஹீரோயின்கள்! இத்தனை பேரா
நடிகர் அல்லு அர்ஜுன் தான் இப்போதைக்கு இந்தியாவில் சென்சேஷன். அவரது புஷ்பா படம் தெலுங்கு தமிழ் மட்டும்மின்றி ஹிந்தியிலும் பெரிய வரவேற்பை பெற்று இருக்கிறது. ஹிந்தியில் மட்டும் 106 கோடி ருபாய் வசூலித்து இருக்கிறது புஷ்பா.
இதை ஹிந்தி சினிமா துறையினரே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். தெலுங்கு படத்திற்கு இவ்வளவு வரவேற்பு கிடைத்ததை பார்த்த பிறகு தற்போது அஜித்தின் வலிமை படத்தை ஹிந்தியில் 1000 தியேட்டரில் வெளியிட இருப்பதாக போனி கபூர் அறிவித்து இருக்கிறார்.
புஷ்பா படம் ஹிந்தி ரசிகர்களையும் அதிகம் கவர்ந்துவிட்டது. அதில் வரும் பாடல்களுக்கு நடனம் ஆடி எக்கச்சக்க சினிமா நட்சத்திரங்களும் வீடியோ வெளியிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் நடிகை தீபிகா படுகோன் அல்லு அர்ஜுன ஜோடியாக வேண்டும் என ஆசை தெரிவித்து இருக்கிறார். மேலும் சமீபத்தில் ஆலியா பட் பேட்டியில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக விருப்பம் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.