Alien Romulus: திரை விமர்சனம்

By Tony Aug 23, 2024 01:49 PM GMT
Report

Don't Breathe புகழ் ஃபெடே ஆல்வரெஸ் இயக்கத்தில் வெளியாகியுள்ள "Alien Romulus" திரைப்படத்தின் விமர்சனம் குறித்து இங்கே காண்போம்.

கதைக்களம்

வெப்பமயமான ஒரு கிரகத்தில் தனது சின்தெடிக் AI சகோதரருடன் சுரங்கத்தில் வேலை செய்து வருகிறார் ரெயின் கர்ரடினே.

அவரது பெற்றோர் சுரங்க வேலையை செய்ததால் நோய்வாய்ப்பட்டு இறந்ததால், உயிர்வாழ இவாகா எனும் கிரகத்திற்கு செல்ல நினைக்கிறார்.

அவருடன் முன்னாள் காதலர் டெய்லர், அவரின் தங்கை கே, ஜோர்ன் ஆகியோரும் இணைந்து கொள்கின்றனர்.

Alien Romulus: திரை விமர்சனம் | Alien Romulus Movie Review

தனி ஸ்பேஸ் ஷிப்பில் விண்வெளிக்கு செல்லும் அவர்கள் அனைவரும், ஒரு பெரிய ஸ்பேஸ் ஸ்டேஷனில் உள்ள Stasis Chambers-ஐ எடுக்க முயற்சிக்கும்போது அங்கு உயிர்பெறும் ஏலியன்களிடம் சிக்குகிறார்கள்.

அதன் பின்னர் அவர்கள் ஏலியன்களிடம் இருந்து தப்பித்தார்களா? இவாகா கிரகத்திற்கு சென்றார்களா? என்பதே படத்தின் கதை.

படம் பற்றிய அலசல்

ஏலியன் படங்களின் வரிசையில் வெளியாகியுள்ள மற்றொரு படம்தான் Alien Romulus. ரிட்லி ஸ்காட் தயாரிப்பில் Don't Breathe, Evil Dead (2013), The Girl in the Spider's Web படங்களை இயக்கிய ஃபெடே ஆல்வரெஸ் இந்த படத்தை கொடுத்துள்ளார்.

ஏலியனிடம் சிக்கும் நபர்கள் எப்படி தப்பித்தார்கள் என்ற பழக்கப்பட்ட கதைதான் என்றாலும், காட்சிகளின் வாயிலாக சுவாரஸ்யங்களை கூட்டியிருக்கிறார் இயக்குநர்.

சூரிய ஒளியை பிரகாசமாக பார்க்கும்போது ஹீரோயின் கைலீ வியக்கும் அந்த காட்சியிலேயே, அவர் சிறுவயது முதல் வெப்ப கிரகத்தில் கஷ்டப்பட்டதை புரிந்துகொள்ள முடிகிறது.

AI ரோபோ சகோதரருக்காக அவர் தனது நண்பர்களுடன் சண்டைபோடும்போதும், ஏலியனை எதிர்த்து போராடும்போதும் நடிப்பில் மிரட்டுகிறார் கைலீ.

மெதுவாக நகரும் திரைக்கதை ஏலியன் வெளிவந்த பின் சூடுபிடிக்கிறது. விண்வெளியில் பயணிக்கும் ஹீரோயினின் குழு இவாகா கிரகத்தை சென்றடையவே 9 ஆண்டுகள் ஆகும் என்பதால், அந்த பயணமே வெற்றிகரமாக முடியுமா என்று தெரியாத சூழலில் ஏலியனிடம் இருந்து வேறு தப்பிக்க வேண்டும் என்பதில் திரைக்கதை சுவாரஸ்யமாகிறது.

ஏலியன் பெண்ணின் உடலில் இருந்து பிரசவமாகும் காட்சி மிரட்டுகிறது. ஒரு கட்டத்தில் படம் முடிந்துவிட்டது என்று நாம் நினைக்கும்போது, அப்போது வரும் ஒரு காட்சி மீண்டும் நம்மை நிமிர வைக்கிறது.

பெஞ்சமின் வால்பிஸ்ச்சின் பின்னணி இசையும், காலோ ஓலிவர்ஸின் ஒளிப்பதிவும் அருமை.

ஏலியன் படங்களை பார்த்து ரசிப்பவர்களுக்கு சண்டைக்காட்சிகள் உறுத்தலாக இருக்காது என்றபோதிலும், கண்டிப்பாக குழந்தைகள் பார்க்கக்கூடிய படம் இதுவல்ல.

க்ளாப்ஸ்

ஏலியன் தொடர்பான சண்டைக்காட்சிகள்

ஒளிப்பதிவு

நடிகர்களின் நடிப்பு

பல்ப்ஸ்

முதல் முறையாக ஏலியன் தொடர்பான படத்தை பார்ப்பவர்களுக்கு சுவாரஸ்யம் குறைவாக தோன்றலாம்

மொத்தத்தில் ஏலியன் படங்களின் ரசிகர்கள் ஒருமுறை பார்த்து ரசிக்கும் வகையிலும், பொதுவான பார்வையாளர்களுக்கு புது அனுபவமாகவும் அமையும் வகையிலும் வெளியாகியிருக்கிறது இந்த Alien Romulus.

ரேட்டிங்: 3/5 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US