"பிக்பாஸ் வீட்டில் எனக்கு துரோகம் செய்தார்கள்" - ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்த பாலாஜியின் பதிவு..
பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி மக்களின் பேராதரவை பெற்று நேற்றுடன் நிறைவடைந்தது, மேலும் இந்த சீசனில் இதுவரை இல்லாத அளவில் ஆரி அதிக வாக்குகளை பெற்று வெற்றியடைந்துள்ளார்.
அதுமட்டுமின்றி ஆரி 16 கோடியே 50 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற்று பெரிய வெற்றியை அடைந்துள்ளார்.
அவருக்கு அடுத்தபடியான இடத்தில் இருக்கும் பாலாஜி முருகதாஸ் 6 கோடியே 14 லட்சம் வாக்குகளை பெற்று இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தற்போது பாலாஜி முருகதாஸ் இரண்டாம் இடம் பிடித்து பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறிய நிலையில் ரசிகர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் பதிவிட்டுள்ளார்.
ஆம், அவரின் பதவில் தனது ரசிகர்களுக்கு நன்றி கூறியது மட்டுமின்றி, தான் வீட்டில் இருந்த போது அவருக்கு நெருக்கமாக இருந்த நண்பர்களே தனக்கு துரோகம் விளைவித்ததாக கூறியுள்ளார்.