தனுஷுக்கு செக்.. அனைத்து படப்பிடிப்புகளும் நிறுத்தம்! தயாரிப்பாளர் சங்கம் அதிரடி முடிவு

By Parthiban.A Jul 29, 2024 01:11 PM GMT
Report

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் கடந்த சில வாரங்களாக பல அதிரடி முடிவுகளை அறிவித்து வருகின்றனர். நடிகர் விஷாலை வைத்து படம் எடுப்பவர்கள் தயாரிப்பாளர் சங்கத்தை கலந்தாலோசித்துவிட்டு படம் தொடங்க வேண்டும் என சில தினங்களுக்கு முன்பு அறிவித்தனர்.

அதே போல நடிகர் தனுஷுக்கு எதிராக ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருக்கின்றனர். பல தயாரிப்பாளர்களிடம் அட்வான்ஸ் பெற்றுக்கொண்டு நடித்து கொடுக்காததால் இனி தனுஷை வைத்து படம் எடுப்பவர்கள் தயாரிப்பாளர் சங்கத்தை கலந்தாலோசித்துவிட்டு தொடங்கவும் என தெரிவித்து இருக்கின்றனர்.

தனுஷுக்கு செக்.. அனைத்து படப்பிடிப்புகளும் நிறுத்தம்! தயாரிப்பாளர் சங்கம் அதிரடி முடிவு | All Shooting Stops From Nov 1 Producer Council

நவம்பர் 1 - அனைத்து ஷூட்டிங் நிறுத்தம்

"மேலும் ஒரு படம் வெளியாகி 8 வாரங்களுக்கு பிறகு தான் ஓடிடியில் வெளியிட வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறது தயாரிப்பாளர் சங்கம்."

"அதுமட்டுமின்றி பல படங்கள் ரிலீசுக்கு தியேட்டர் கிடைக்காமல் முடங்கி இருக்கின்றன. இந்த நிலையை மாற்ற புது விதிகள் வகுக்கப்பட இருக்கிறது. அந்த விதிகள் நடைமுறைக்கு வந்த பிறகு புது ஷூட்டிங் தொடங்கலாம் என்பதால் 16.8.2024 பிறகு புது படங்கள் எதுவும் தொடங்க கூடாது."

"நடிகர்கள் சம்பளம், தொழில்நுட்ப கலைஞர்கள் சம்பளம் கட்டுக்கடங்காமல் சென்று கொண்டிருக்கிறது. அதை முறைப்படுத்த வேண்டி இருக்கிறது. தமிழ் சினிமா துறையை மறுசீரமைப்பு செய்ய வேண்டி இருப்பதால் 01.11.2024 தேதி முதல் அனைத்து விதமான ஷூட்டிங்கும் நிறுத்தப்படுகிறது" என தயாரிப்பாளர் சங்கம் அறிவித்து இருக்கிறது. 

You May Like This Video


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US