ஊ சொல்றியா மாமா.. பாடல் சர்ச்சை பற்றி அல்லு அர்ஜுன் ஒரே வார்த்தையில் கொடுத்த பதில்
நடிகர் அல்லு அர்ஜுன் மற்றும் ராஷ்மிகா நடித்து இருக்கும் நடித்து இருக்கும் புஷ்பா தெலுங்கு படம் தமிழ் உட்பட பல்வேறு மொழிகளை வெளியாக உள்ளது. செம்மர கடத்தல் தொடர்பான அந்த கதை படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இரண்டு பாகங்களாக உருவாகி இருக்கும் புஷ்பா படத்தின் முதல் பாகம் வரும் 17ம் தேதி ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தில் சமந்தா ஒரு ஐட்டம் பாடலுக்கு நடனம் ஆடி இருக்கிறார். "ஊ சொல்றியா மாமா.. ஊஊ சொல்றியா" என்ற அந்த பாடல் இணையத்தில் வைரல் ஆகிறது.
அதே நேரத்தில் அது ஆண்களை தவறாக சித்தரிக்கிறது என சொல்லி சில சர்ச்சைகளும் எழுந்திருக்கிறது. இந்நிலையில் இது பற்றி அல்லு அர்ஜுனிடம் கேட்டதற்கு ஒரே வார்த்தையில் பதில் அளித்து இருக்கிறார்.
"உண்மைதானே" என அவர் பதில் கூறி இருக்கிறார்.