அல்லு அர்ஜுன்-அட்லீ இணையும் படத்தின் நாயகி இவரா?.. வேறலெவல் கூட்டணி
அட்லீ படம்
தமிழ் சினிமாவில் இருக்கும் இளம் இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் அட்லீ.
ராஜா ராணி என்ற படத்தின் மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்தவர் இப்போது ராஜாவாக கலக்கி வருகிறார். விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் என தொடர்ந்து படங்கள் எடுத்து வெற்றிக் கண்டவர் பாலிவுட் பக்கம் சென்றார்.
அங்கு பாலிவுட்டின் பாட்ஷா ஷாருக்கானை வைத்து ஜவான் என்ற படத்தை இயக்கி ரூ. 1000 கோடி வசூலை கண்டார்.
அடுத்த படம்
அட்லீ இப்படத்தை தொடர்ந்து யாருடன் இணைவார் என நிறைய செய்திகள் சமூக வலைதளங்களில் வலம் வந்த நேரத்தில் அவர் அல்லு அர்ஜுனுடன் தான் அடுத்த படம் இணைகிறார் என கூறப்பட்டது.
தற்போது அட்லீ-அல்லு அர்ஜுன் இணையும் புதிய படத்திற்கு நாயகியாக பிரியங்கா சோப்ரா நடிக்க இருப்பதாக தகவல்கள் வந்துள்ளது.
இந்த படத்தில் நாயகியாக நடிக்க ஹாலிவுட்டில் இருந்து இந்தியா பக்கம் வந்துள்ள பிரியங்கா சோப்ரா ரூ. 30 முதல் ரூ. 40 கோடி வரை சம்பளம் கேட்டுள்ளார் என்கின்றனர்.

மனைவியும் மாமியாரும் தினமும் துஷ்பிரயோகம் செய்வதாக அதிர்ச்சி புகார்! ரகசிய கமெரா மூலம் அம்பலமான கொடுமை News Lankasri
