நடிகர் அல்லு அர்ஜுனின் ஃபிட்னஸ் ரகசியம் என்ன தெரியுமா.. அவரே கூறிய தகவல்
அல்லு அர்ஜுன்
தெலுங்கு திரையுலகில் அறிமுகமானாகி, இன்று உலகளவில் பிரபலமான நடிகராக இருக்கிறார் அல்லு அர்ஜுன். இவர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான புஷ்பா 2 திரைப்படம் மாபெரும் அளவில் வெற்றியடைந்தது.
ரூ. 1700 கோடிக்கும் மேல் இப்படம் வசூல் செய்ததாக சொல்லப்படுகிறது. படத்தின் வெற்றி ஒரு பக்கம் இருந்தாலும், இப்படத்தின் முதல் நாள் முதல் காட்சியின் போது, கூட்ட நெரிசலில் சிக்கி பெண் ஒருவர் மரணமடைந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனால் அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டனர். பின் ஒரே நாளில் சிறையில் இருந்து வெளிவந்தார். இந்த வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் இருந்து நல்ல தீர்ப்பு வரும் என அல்லு அர்ஜுனின் ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.
அல்லு அர்ஜுன் ஃபிட்னஸ்
இந்த நிலையில், நடிகர் அல்லு அர்ஜுன் தனது ஃபிட்னஸ் குறித்து பேசியுள்ளார். இதில் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தனது ஃபிட்னஸ் ரகசியம் என்ன என்பது குறித்து தகவலைகளை பகிர்ந்துள்ளார். அதை பற்றி பார்க்கலாம் வாங்க.
அவர் கூறியதாவது " ப்ரோட்டீன் தேவைகாக காலையில் 2 முட்டைகளை உணவில் சேர்த்து கொள்வேன். மத்திய உணவு மற்றும் இரவு உணவு பிடித்தமானவற்றை சாப்பிடுவேன். ஒவ்வொரு நாளும் வெறும் வயிற்றில் 45 நிமிடங்கள் ஓடுவேன். இது என்ன ஆரோக்கியமாக வைத்து கொள்வதற்கு உதவுகிறது. உடல் நலனை போல், மனா நலனிலும் கவனம் செலுத்த வேண்டும். பால் பொருட்களை தவிர்த்துவிடுகிறேன்" என அவர் கூறியுள்ளார்.

குஞ்சுகளை வாய் வழியாக பெற்றெடுக்கும் உயிரினம் எது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க! IBC Tamilnadu
