தமிழ் சினிமாவில் அல்லு அர்ஜுனா?.. வெறித்தனம்!! இயக்குனர் யார் பாருங்க
புஷ்பா
அல்லு அர்ஜுனின் திரை வாழ்க்கையில் மாபெரும் வெற்றியடைந்த திரைப்படங்களில் ஒன்று புஷ்பா. கடந்த 2021ஆம் ஆண்டு வெளிவந்த இப்படத்தின் முதல் பாகம், மக்களிடையே அமோக வரவேற்பை பெற்றது.
இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் உருவான இப்படத்தில் பகத் பாசில், ராஷ்மிகா மந்தனா, சுனில், அனுஷ்யா, ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
புஷ்பா 1 தி ரைஸ் படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது புஷ்பா தி ரூல் திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படம் வரும் டிசம்பர் 5 - ம் தேதி வெளிவர உள்ளது.
இதன் காரணமாக, இரண்டு நாட்களுக்கு முன் சென்னை தாம்பரத்தில் புஷ்பா படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினர்களாக பல முக்கிய நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் கலந்து கொண்டனர்.
யார் பாருங்க
அப்போது மேடையில் இயக்குனர் நெல்சன் திலீப் குமாரிடம் எப்போது நீங்கள் அல்லு அர்ஜுனை வைத்து திரைப்படத்தை இயக்கப் போகிறீர்கள் என்று கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு, " இதற்கான பதில் அல்லு அர்ஜுனிடமிருந்து தான் வர வேண்டும். எனக்கு அவரை வைத்து ஒரு படம் பண்ண வேண்டும் என்று ரொம்ப ஆசை ஆனால் தெலுங்கு மொழி தெரியாமல் இருந்ததால் நான் அதை செய்யாமல் விட்டிருக்கிறேன்.
தற்போது இவர் தமிழில் பேசுவதை கண்டு வியந்து விட்டேன்" என்று கூறியுள்ளார். அப்போது, அல்லு அர்ஜுன் அவரது கைகளை உயர்த்தி தம்ஸ் அப் காட்டி கிரீன் சிக்னல் கொடுத்திருக்கிறார்.

நடிகை விஜயலட்சுமிக்கு 7 முறை கருக்கலைப்பு; பணம் பெற்ற சீமான் - வெளியான நீதிமன்றம் தீர்ப்பு IBC Tamilnadu

குஞ்சுகளை வாய் வழியாக பெற்றெடுக்கும் உயிரினம் எது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க! IBC Tamilnadu
