புஷ்பா 2க்கு சம்பளத்தை அதிரடியாக உயர்த்திய அல்லு அர்ஜுன்! விஜய்யை ஓவர்டேக் செய்துவிடுவாரா?
நடிகர் அல்லு அர்ஜுன் தற்போது தமிழ்நாட்டிலும் மிக பிரபலமான ஒருவர் தான். புட்டபொம்மா பாட்டுக்கு டான்ஸ் ஆடி ரீல்ஸ் வீடியோ வெளியிட்டவர்கள் இங்கும் அதிகம் இருக்கிறார்கள். புஷ்பா படம் மிகப்பெரிய ஹிட் ஆன பிறகு தற்போது ஹிந்தியிலும் அதிகம் அறியப்படும் ஹீரோ ஆகிவிட்டார் அல்லு அர்ஜுன்.
புஷ்பா 2
புஷ்பா அடுத்த பாகத்தின் ஷூட்டிங் தொடங்கி நடைபெற்று வந்த நிலையில் சமீபத்தில் அது நிறுத்தப்பட்டது. கேஜிஎப் 2 தற்போது வசூல் சாதனை படைத்து வரும் நிலையில், அதை பார்த்த இயக்குனர் புஷ்பா படத்தின் தரத்தை உயர்த்த மேலும் சில மாறுதல்களை செய்ய முடிவெடுத்து இருப்பதாக சொல்லப்படுகிறது. அதற்காக தான் தற்போது ஷூட்டிங் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு இருப்பதாகவும் தெரிகிறது.

அல்லு அர்ஜுன் சம்பளம்
அல்லு அர்ஜுன் முதல் பாகத்தில் பெற்ற சம்பளத்தை விட பல மடங்கு அதிகம் சம்பளத்தை இந்த இரண்டாம் பாகத்தில் கேட்கிறாராம்.
அவருக்கு 100 கோடி ருபாய் சம்பளம் தரப்படுவதாக தற்போது தெலுங்கு சினிமா மீடியாக்களில் செய்தி வெளியாகி இருக்கிறது. இதனால் தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக இருக்கும் விஜய் சம்பளத்தை கிட்டத்தட்ட நெருங்கிவிட்டார் அல்லு அர்ஜுன்.