1 வருடத்தை எட்டிய அல்லு அர்ஜுனின் புஷ்பா 2 திரைப்படம்... மொத்த வசூல் விவரம்
புஷ்பா 2
மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் அல்லு அர்ஜுன்-ராஷ்மிகா நடிக்க வெளியாகி இருந்த திரைப்படம் புஷ்பா 2 தி ரூல்.
சுகுமார் இயக்கத்தில் வெளியான முதல் பாகத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து 2ம் பாகம் தயாராகி கடந்த ஆண்டு வெளியாகி இருந்தது.

அல்லு அர்ஜுனின் அட்டகாசமான நடிப்பு, ராஷ்மிகாவின் ஆளை மயக்கும் கவர்ச்சி, மாஸ் சண்டை காட்சிகள் என படத்தில் ரசிகர்கள் ரசிக்கும் வண்ணம் நிறைய விஷயங்கள் இடம்பெற பெரிய அளவில் கொண்டாடப்பட்டடது.
பாக்ஸ் ஆபிஸ்
படம் வெளியான முதல் நாளே உலகளவில் ரூ. 294 கோடிக்கு மேல் வசூல் செய்தது.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி மொழிகளில் வெளியாகி அனைத்து மொழிகளிலுமே வசூல் சாதனை படைத்தது. தற்போது புஷ்பா 2ம் பாகம் வெளியாகி 1 வருடத்தை எட்டிவிட்டது.
இப்படம் மொத்தமாக ரூ. 1881 கோடிக்கு வசூல் செய்து Industry ஹிட் படமாக அமைந்துள்ளது.